Column Left

Vettri

Breaking News

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு !




நூருல் ஹுதா உமர்

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இத்தேர்வு சனிக்கிழமை கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாக தெரிவின் போது நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களை சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், ஒருமித்த ஆதரவுடன் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்  ஐ.எல்.எம். மாஹிர் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுநலன் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்திலுள்ள நீண்ட அனுபவமும், ஊக்கமிக்க செயலாற்றலும் கொண்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர், சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு புதிய திசையை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “இது தனிப்பட்ட கெளரவமாக அல்லாமல்; சம்மாந்துறை தாய்க்கு கிடைத்ததோர் கெளரவமாகும்".

நாடளாவிய உள்ளூராட்சி அமைப்புகளின் ஒற்றுமை, முன்னேற்றம், மற்றும் மக்களுக்கான நலன்கள் என மூன்று முக்கிய திசைகளை நோக்கி  பணியாற்றுவார் என நம்புகிறேன் என பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்

No comments