Column Left

Vettri

Breaking News

மாவடிப்பள்ளி வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு-இருவர் கைது!!




பாறுக் ஷிஹான்

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை(7) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சுமார் 23 மற்றும் 26 வயதுடைய வீரமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களை  40 000 மில்லி லீட்டர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.கைதான இச்சந்தேக நபர்கள் உட்பட சான்றுப்பொருட்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையானது  விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய     மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்   கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்   இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments