Column Left

Vettri

Breaking News

கல்முனையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெப்பு!!




பாறுக் ஷிஹான்

ஹெரோயின்  போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின்  போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை   ஞாயிற்றுக்கிழமை(7)  இரவு   கல்முனை விசேட அதிரடிப் படையினர்  கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 25 வயது மதிக்கத்தக்க 1 பிள்ளைகளின் தந்தையான  கல்முனை  பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின்   போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட கடற் தொழில் செய்யும்  சந்தேக நபரிடம் இருந்து 740  மில்லிகிராம் ஹெரோயின்  போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன்  சந்தேக நபர் உட்பட  சான்றுப்பொருட்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில்   விசேட அதிரடிப் படையினரால் சட்ட நடவடிக்கைக்காக  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது  விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய     மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்   கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்   இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments