Column Left

Vettri

Breaking News

சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம்! அம்பாறை மாவட்ட சாதனை மாணவன் கனீஷ் கூறுகிறார்!




( வி.ரி. சகாதேவராஜா)

சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம் என்று 
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்ற  சம்மாந்துறை வலய புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஷ் தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற "ஆளுமைகளின் அரங்கம்" நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா நேர்காணல் கண்டபோது சாதனை மாணவன் கனீஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது சாதனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 எனது பெயர் பிரகலதன் கனீஸ். நான் சம்மாந்துறை வலயத்திலுள்ள புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  கல்வி கற்கின்றேன்.

நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று  வலயமட்டத்திலும் அம்பாறை மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளேன்.

 இதற்கு உறுதுணையாக இருந்த கடவுளுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுகின்றேன். இரண்டாவதாக என்னை சிறப்பாக வழிநடத்தி என்னை உற்சாகப்படுத்தி எனக்காக தம்மையே அர்ப்பணித்த எனது பெற்றோர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து எனது அதிபர், வகுப்பாசிரியை, எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கும் நன்றிகள்.

என்னோடு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனத் தெரிவித்தார்.

இந்  நிகழ்வில்  அதிபர் ஆர். ஜெயசிங்கம் ,
கற்பித்த ஆசிரியை திருமதி இராமச்சந்திரன்,  மாணவனின் தாய் திருமதி வனிதா பிரகலதன்,பிரதி அதிபர் கே. கிருஷ்ணமோகன்  ஆகியோரும் அத்தருணத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.

No comments