கார்மேல் பாத்திமா கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் தின விழா !
நூருல் ஹுதா உமர்
கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் ச. இ. ரெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவு குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்குபடுத்தலின் கீழும் 20.09.2025 அன்று வெகு சிறப்பாக பாடசாலையில் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அப் பாடசாலையின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு FSC அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அருட் சகோதரர் எம்.ஸ்ரிபன் மத்தியு FC அவர்களும், அருட் சகோதரர் எப்.ஆர்.விரைனர் செலர் அவர்களும் கலந்து சிறப்பித்த துடன், 750 க்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கல்விசாரா ஊழியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற ஆசிரியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற கல்வி சாரா ஊழியர்கள், தற்போது பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
No comments