IGP இன் வாட்ஸ் அப்பில் 5நாட்களில் 3000மேற்பட்ட முறைப்பாடுகள்!!
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களை முறையிடும் நோக்கில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்திய வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த ஐந்து நாட்களில், இந்தளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய பொலிஸ் மா அதிபர் இந்த வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
071 8598888 என்ற இந்த இலக்கம் இம்மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேலான முறைப்பாடுகள் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments