மாகாண சபைத் தேர்தலை நடத்திய பின்னரே அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும்!!
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்தேர்தலை நடத்திய பின்னரே அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர்,, கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் ;
தேர்தலை நடத்தவதிலுள்ள சட்டச் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டச் சிக்கல் தீர்க்கப்பட்டதும் அடுத்த ஆண்டின் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். நாம் இந்த ஆண்டிலும் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலை நடத்தினோம். அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவோம்.சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதால் அவற்றை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது தொடர்பில் எம்மிடம் கொள்கை ரீதியான தீர்மானம் உள்ளது.புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது ஒரு விரிவான செயற்பாடு. இதனால்தான், அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எமது இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தை, ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments