தீர்வின்றேல் தொடர் போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ். வேலை நிறுத்த போராட்டத்தில் அன்றாட செயற்பாடுகள் முடக்கம்!!
நூருல் ஹுதா உமர்
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று 2025.08.20 ஆம் திகதி பல்கலைக்கழக முன்றலில் அமைதிவழி வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்க நிலையை அடைந்திருந்தன.
ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். முனாஸ் தலைமையில் 20.08.2025 ஆம் திகதி புதன்கிழமை முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் பேரணியிலும் ஈடுபட்ட ஊழியர்கள். பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஒலுவில் பிரதான வீதி வரை ஊர்வலமாக சென்றனர்.
நீண்ட கால சம்பள முரண்பாடுகளை சரி செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் இந்த முழு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
பொதுச் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் உள்ளிட்ட ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஊழியர்களும் பங்குகொண்டனர்.

No comments