தகைமைகளை உறுதி செய்யாத தனியார் மருந்தகங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!
பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்களை பதிவு செய்வதற்கும் அவற்றில் பணியாற்றும் தகைமையுள்ள மருந்தாளர்களை பதிவு செய்வதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில், இந்தப்பதிவுகள் இடம்பெற வேண்டும்.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் காணப்படும் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியதன் மூலம், எந்த தனியார் மருந்தகங்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில்,இராமநாதன் அர்ச்சுனா எம்.பி .
எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டம் கடந்த 10 வருடங்களாக நடைமுறையில் இருக்கவில்லை. தற்போது அந்த சட்டத்திற்கு இணங்கவே அதிகார சபையின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தகைமைகளை உறுதி செய்யாத தனியார் மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments