உப்பின் விலை குறைப்பு!!
உப்பு வகைகளின் சில்லறை விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சோல்ட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைகள் குறைக்கப்பட்டுள்ளதை நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக உறுதிப்படுத்தினார்.
இதற்கமைவாக, 120 ரூபாவுக்கு விற்கப்பட்ட 400 கிராம் அயடின் கலந்த உப்புப் பொதியின் விலை 100 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ படிக உப்பு பொதி 180 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைந்துள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் இவற்றை பெற்றுக்கொள்ள முடியும். மேலும்,400 கிராம் உப்பு பொதி 90 ரூபாவாகவும் ஒரு கிலோ படிக உப்பு பொதி 140 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments