கெஹல்பத்தர உள்ளிட்ட 6பேர் இந்தோனேசியாவில் கைது!!
பாதாள உலக குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments