Column Left

Vettri

Breaking News

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடச் செல்லும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ?




 யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.


No comments

Subscribe Us