Column Left

Vettri

Breaking News

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்




 பாறுக் ஷிஹான்


இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான  விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என   என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு உல்லாச பிரயாணிகளினால் ஏற்படும் விடயங்கள் குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று    நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு தெரிவித்ததாவது

இன்று இஸ்ரேலிய உல்லாசப்பிரயாணிகளினால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவி வருகின்றது.அதாவது சபாத் ஹவூஸ் என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நிர்மாணம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு மெத்தன போக்கில் உள்ளதை காண முடிகின்றத .எனவே தான் உடனடியாக இந்த விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

No comments