Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய புனராவர்த்தன் அஷ்டபந்தன ஏககுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம்




 வி.சுகிர்தகுமார்    




கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய புனராவர்த்தன் அஷ்டபந்தன ஏககுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் நேற்று 16ஆம் திகதி சுபநேரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 கடந்த 14 ஆம் திகதி கிரியாகால ஆரம்பம் கிரியைகள் இடம்பெற்றது.
 தொடர்ந்து 15ஆம் திகதி அதிகாலை காலை 7மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வோடும் 16ஆம் திகதி காலை 10மணி 11நிமிடம் முதல் 11 மணி 56 நிமிடம் வரையுள்ள சஷ்டி திதியும் உத்தர நட்சத்திரம் சித்த யோகமும் கன்னி லக்கினமும் கூடிய சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிசேக குடமுழுக்கும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
 நடைபெற்ற ஏககுண்டயாக பூஜையினை தொடர்ந்து கலசத்திற்கான கும்பம் சொரியும் பக்தி பூர்வமான நிகழ்வு பெருந்திரளான பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் நடைபெற்றது.
 பின்னர் பிரதான கும்ப வெளி வீதி உலா நடைபெற்றதுடன் விநாயகப்பெருமான் மீது கும்பம் சொரியப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றது.
 கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் நடைபெறு உள்ளதுடன்;; இம்மாதம் 28ஆம் திகதி அஸ்டோத்தர சகஸ்ர 1008 சங்காபிசேத்துடன் மண்டல பூஜைகளும் கும்பாபிசேக கிரியைகளும் நிறைவுறும்.
 ஆலய தலைவர் தலைமையில் நடைபெறும் கும்பாபிசேகத்தின் கிரியைகள் யாவும் சிவஸ்ரீ சரவண காசீபதிஸ்வரக்குருக்கள் வழிநடத்தலில் வேதாகம ஞானபானு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களின் ஆசியுடன் கும்பாபிசேக பிரதிஷ்டா பிரதமகுரு பிரதிஷ்டா பூசணம் சிவஸ்ரீ சீதாராம கௌரி சங்கர் குருக்கள் மற்றும்; சாதக இளஞ்சுடர் சிவஸ்ரீ கோகுலதாச சர்மா, ஆலய குரு சிவஸ்ரீ இராம ஜெகதீஸ்வர சர்மா உள்ளிட்ட குருமார்கள்; நடாத்தி வைத்தனர்.




No comments