Column Left

Vettri

Breaking News

பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டல் நிகழ்வு




 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டலும் புதிதாக குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்களை வரவேற்கும் நிகழ்வு  சனிக்கிழமை (28) மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இடம் பெற்றது.

பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், விஷேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹீத், விஷேட அதிதிகளாக கிராம சேவகர் பிரிவு 14யின் பொலிஸ் பொறுப்பாதிகாரி சார்ஜன். டி.எம்.ஏ. அமீர், கிராம சேவகர் எம்.ஏச். ஜனூபா
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது மக்கள் பாதுகாப்பு குழுவில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்கள் அறிமுகம், கிராம சேவகர் பிரிவின் கீழ் அமையப்பெற்றுள்ள கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி மாணவிகள் வீதி போக்குவரத்து பிரச்சினை , பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடுகள், குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையடப்பட்டன.

சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதி முறைகள் தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பினை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் குழு அங்கத்தவர்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ. வாஹீத் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். 

இந்நிகழ்வில் பிரதித் தலைவர் எஸ்.எல். ரஸீட், உப செயலாளர் எம்.சி. ஜனூரியா, பொது மக்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பெண்கள் பிரிவு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments