Vettri

Breaking News

காரைதீவுக்கான முகா போனஸ் ஆசனத்தை மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும்! முகா ஆதரவாளர்கள் கோரிக்கை !




 ( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போனஸ் ஆசனத்தை மாவடிப் பள்ளிக்கு  வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்த காரைதீவு பிரதேச உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தை வென்றது. அதில் பிரதான வேட்பாளர் எம் எச் எம்.இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டார் .

பிரதேச மொத்த வாக்கு அடிப்படையில் போனஸ் ஆசனமொன்று கிடைத்தது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் 444 வாக்குகளும் மாவடிப்பள்ளியில் 569 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது .

அந்த அடிப்படையில் இந்த ஆசனம் மாவடிப் பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும்.
அது  மாவடிப்பள்ளி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை 
உறுப்பினருமான எம் என் எம் .றனீஷ்க்கு  வழங்கப்பட வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாளிகைக்காடு கிராமத்திற்கு ஏலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை என்று மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஆனால்மாவடி ப்பள்ளிக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைக்கப்பெற்றது.

 எனவே மாவடிப்பள்ளிக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது .


மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் 479 வாக்குகளை பெற்று சுயேட்சை அணித்தலைவர் யாகிர் போனஸ் ஆசனத்தைப் பெற்றுள்ளார் .

எனவே அங்கு மு.காவிற்கு  கிடைக்கப்பெற்ற  444 என்ற வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

 ஆகவே போனஸ் ஆசனத்திற்கு காரைதீவு பிரதேச சபையினல் இருந்து ஒரு ஆசனம் தெரிவாக காரணமானது மாவடிப் பள்ளியில் கிடைக்கப்பெற்ற 569 வாக்குகள் என்பதை உலக அறியும் .

எனவே முகா தலைமைகள் இதனை உணர்ந்து இந்த ஆசனத்தை மாடவடிப்பள்ளி றனீஸ்க்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.


No comments