Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை பிரதேச சபைத்தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் முன்னிலையில் ; 3 தொங்கு உறுப்பினர்களும் தெரிவு.






 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

முன்னாள் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினரும்  நீண்ட காலம் சவூதி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் உயர் பதவி வகித்தவருமான ஐஎல்எம்.மாஹிர்  தவிசாளராக தெரிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குள்ள வட்டாரங்கள் 10 .ஆனால் வீரமுனை வட்டாரம் மூன்று அங்கத்தவர்ளைக் கொண்டது . அதன் காரணமாக வட்டார ரீதியாக 12 பேர் தெரிவாகினர். போனஸ் 08 ஆசனங்கள். மொத்தமாக 20 ஆசனங்கள். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகளின்படி 03 தொங்கு ஆசனங்களும்  கிடைத்துள்ளது.
ஆதலால் சம்மாந்துறை பிரதேச சபைக்கு வரலாற்றில் இம் முறை 23 உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 12676 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் 

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8124 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3990 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி - 2540 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழ் அரசு கட்சி - 2036 வாக்குகள் - 1 உறுப்பினர் 

தேசிய காங்கிரஸ் - 1393 - 1 உறுப்பினர்

இங்கு மூன்று தொங்கு உறுப்பினர்களும்(hanging members) தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments