Column Left

Vettri

Breaking News

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா; பிரதம அதிதியாக கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்..!!!




 (எஸ். சினீஸ் கான்)

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பனிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக இக்காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மட்/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா நிகழ்விலும் அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments