Column Left

Vettri

Breaking News

மஹ்மூத் சாதாரண தர பிரிவின் பெறுபேறுகளை மேம்படுத்தல் செயற்திட்டங்கள் ஆரம்பம்.




 நூருல் ஹுதா உமர்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த (ச/த) - 2024 தொகுதி மாணவிகளின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில் பாட ரீதியிலான கருத்தரங்குகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அப்பிரிவின் பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம். நளீம் தலைமையில் திங்கட்கிழமை சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறந்த அறிவுரை, ஆலோசனைகளையும் வழங்கினார். பாட ரீதியிலான கருத்தரங்குகள் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர்களின் வழிகாட்டல்களில் பல்லூட எறிவை (Multimedia) தொழில்நுட்ப உதவிகளுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் இப்பாடசாலையில் இருந்து 26 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது






.

No comments