Column Left

Vettri

Breaking News

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன பிரதிநிதி கல்முனை விஜயம்!!!




 ( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன (IMHO) பிரதிநிதி எஸ்.முரளி  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார்.

 கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தலைமையிலான குழுவினர் அவரை வரவேற்று
 அவர்களின் அமைப்பால் முன்னெடுக்கப்படும் திட்டங்களைக் காண்பித்தார் .

பிரதிநிதி முரளி அவற்றை நேரில் மதிப்பாய்வு செய்தார்.

அவர்களால் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் 
 நீரிழிவு மையம்,
குழந்தைகள் விடுதி  பூங்கா மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு 
,மற்றும் 
 எலும்பியல் பிரிவுக்கான உபகரணங்கள் என்பனவற்றின் உயிர்ப்பான இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்தார்.

விஜயத்தின் போது பயனாளிகள் மற்றும் நிர்வாக குழுவினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 
இந்த ஒத்துழைப்பு தற்போதுள்ள திட்டங்களில் மேலும் மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் எதிர்காலத்தில் IMHO உடன் புதிய திட்டங்களைத் தொடங்க வழி வகுக்கும் என்று பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.










No comments