Column Left

Vettri

Breaking News

புலமைப் பரிசில் பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள்!!









பாறுக் ஷிஹான்

காத்தான்குடி  ஸாவியா மகளிர்   பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ். எம். முஜீப்   தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.ஜி.எம்  ஹக்கீம்   கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளால் மாணவர்கள்  மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்   பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

No comments