Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த ஒன்று கூடலும் அதிதிகள் கௌரவிப்பு நிகழ்வும் !




 மாளிகைக்காடு செய்தியாளர்


கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் கீழ் உள்ள சம்மாந்துறை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த ஒன்று கூடலும் அதிதிகள் கௌரவிப்பு நிகழ்வும் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவருமான ஏ.ஆதம்பாவா, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பாலர் பாடசாலை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


சம்மாந்துறை கல்வி வலய பாலர் பாடசாலை மாணவர்களின் சமூக நல்லிணக்க கலை, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகள் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.








No comments