Column Left

Vettri

Breaking News

இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் கல்முனை பாலிகாவுக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கி வைப்பு!!




நூருல் ஹுதா உமர்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்பெறும் நோக்கில் ஸ்மார்ட் போர்ட் (Smart Board) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்குறித்த ஸ்மார்ட் போர்ட் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை உத்தியோகபூர்மாக கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கையாளிக்கும் நிகழ்வு இன்று அதிபர் காரியாலத்தில் இடம்பெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் எமது கல்லூரிக்கு ஸ்மார்ட் போர்ட் பெற்றுத்தருவதாகக் அளப்பரிய பங்காற்றிய கல்முனை முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருமான ஜே.லியாக்கத் அலி அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், கல்முனை பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments