Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் புதுக்கவிதை துறையில் விபுலசசி முதலிடம்!!






( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான புதுக்கவிதைத் துறையில் காரைதீவைச் சேர்ந்த இளங்கவிஞர் விபுலசசி என அழைக்கப்படும் மனோகரன் சசிப்பிரியன்   முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் சிரேஸ்ட தாதிய  உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் மனோகரன் சசிப்பிரியன் 
ஏலவே பல விருதுகளைப் பெற்றவர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்க போட்டியில் புதுக்கவிதை துறையில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை களுதாவளையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விருது விழாவில்  முதலாமிடம் பெற்று, விருது, சான்றிதழ் மற்றும் காசோலையைப் பெற்றுக்கொண்டார்.

No comments