வடக்கு கிழக்கில் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
வடக்கு கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரும் ,கிழக்கு மாகாண பதில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன்,
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 2 ஆம் தேதிக்கு பிறகு அமுலாகும் வண்ணம் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது
No comments