125 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பான ஊடக சந்திப்பு!!
பாறுக் ஷிஹான்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பகுதியிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக 13.10.2024 முதல் 13.10.2025 வரை சிறப்பிக்கப்படவுள்ளது.
கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியின் 125 வது ஆண்டு விழா தொடர்பில் இன்று (29) விசேட ஊடக சந்திப்பில் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
எதிர்வரும் ஒக்டோபர் 13 ம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 13 வரை இவ்விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் இதற்கென வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் உட்பட உள்ளுர் பழைய மாணவர்களைக் கொண்ட பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் முக்கிய நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளதகவும் தெரிவிக்கப்பட்டது
இதன் போது கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள்கலந்து கொண்டிருந்தனர்.
No comments