Column Left

Vettri

Breaking News

அர்ச்சுனா பிணையில் விடுதலை!!




 வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது


மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து, 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், கையில் விலங்கிடப்பட்ட நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, வைத்தியர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது

No comments