Column Left

Vettri

Breaking News

புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!




 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தெரிவித்தா

No comments