10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற காதி நீதவான் கைது!!!
பெண்ணொருவரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளர் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணாவார். தன்னை பராமரிப்பதற்கும், தன்னை அவமானப்படுத்தியதற்காக 80 ஆயிரம் ரூபாய் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களை முறைப்பாட்டாளர் காதி நீதவானிடம் வழங்கியுள்ளார்.
அந்த நட்ட ஈட்டை பெற்றுத்தருவதற்கு தேவையான ஆவணங்களை தயார்படுத்துவதற்காக 50,000 ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளார். அதில் 10,000 ரூபாவை வரக்காமுர பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments