Column Left

Vettri

Breaking News

சுகாதார அமைச்சருடன் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல் !!




 சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (5) கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண  ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு  ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இந்த சந்திப்பின்போது உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி.மஹிபாலவும்  கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments