Column Left

Vettri

Breaking News

159 பொறியியலாளர்கள் வெளியேற்றம்!!!




 


இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்று சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (15) தெரிவித்தார்.

நிர்வாக சபையில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் ஏராளமான பொறியாளர்கள் தங்களுடைய நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அதன் காரணமாக அவர்கள் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் ஒரு புதிய பொறியாளர் மாதம் சுமார் 4,000 டாலர்கள் சம்பளம் பெறுவதாகவும், அனுபவம் வாய்ந்த பொறியாளர் சில நாடுகளில் மாதம் 6,000 முதல் 8,000 டாலர்கள் வரை சம்பளம் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

No comments