Column Left

Vettri

Breaking News

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்பு!!!




 


இந்தியா கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்க யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேள் புனிதப் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று (26.02.2024) இடம் பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். 

“கறுப்புக்கொடி போராட்டம் எதிர்வரும் மூன்றாம் திகதி (03.03.2024) யாழ்ப்பாண மாவட்ட கடற்பகுதிகளில் இடம்பெறவுள்ளதோடு இந்தியா எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடிகளைத் தாங்கி நமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம். 

இந்திய கடற்றொழிலாளர்களினால் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது பிரச்சனை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஆனால் இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுவதை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்து வெளியிடுவது மன வேதனையை தருகிறது.” என கூறியுள்ளார்.


No comments