Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்!!




 திருக்கோவில் பிரதேச செயலாளர்.T.கஜேந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில்  நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ W.D வீரசிங்க ஆகியோர் திருக்கோவில் விஜயம்.













விவசாய நவீன மயமாக்கள் திட்டத்தின் கீழ் (ASMP project ) ஜம்பு நிலக்கடலை பயிர்ச்செய்கை நடவடிக்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.இவ் விவசாய பொருட்களை பிரதேச செயலாளர்.T.கஜேந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில்  நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ W.D வீரசிங்க ஆகியோர் எமது திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தெரிவுசெய்யப்பட்டுள்ள  பயனாளிகளுக்கு வழங்கிவைத்தனர்.


இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.S.நிருபா நிர்வாக உத்தியோகத்தர் திரு.T.மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  திரு.N.கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்....


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் நிருபர்...

No comments