20 சமாதான நீதவான்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த நீதி அமைச்சர் கௌரவ. கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களினால் தெரிவுசெய்யபட்ட 20 புதிய சமாதான நீதவான் பதவி நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 பேருக்கு சமாதான நீதவான் பதவி நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் 20 பேருக்கான சமாதான நீதவான் பதவி நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பிராந்திய காரியாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








No comments