Column Left

Vettri

Breaking News

கொழும்பு, ஜம்பட்டா தெரு கோழிக்கடை உரிமையாளர் மீதே துப்பாக்கிப் பிரயோகம்!!!






கொழும்பு, ஜம்பட்டா தெருவில் உள்ள கோழிக்கடை உரிமையாளர் ஒருவர் மீதே இன்று (25) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.மொஹமட் ரில்வான் என்ற 57 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அருகில் வந்து ரிவோல்வர் ரக துப்பாக்கியால் மூன்று தடவைகள் சுட்டதாகவும், அதில் ஒருவர்  அவரைத் தாக்கியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

No comments