Column Left

Vettri

Breaking News

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது!




 


வெலிகந்த கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 5 கைதிகள் செவ்வாய்க்கிழமை இரவு (09) தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும்  இவர்களில் இருவர் புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  சுங்கவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி இந்த புனர்வாழ்வு  நிலையத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிய  நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

No comments