Column Left

Vettri

Breaking News

யாழில் 23 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்!!





 யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். 

வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் வலி. வடக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி முப்படைகளின் வசம் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments