Column Left

Vettri

Breaking News

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், 485 எச் ஐ.வி நோயாளர்கள்!





 கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2022ம் ஆண்டில் 425 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட எச் ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் எச்.ஐ.வி நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என வைத்தியர் ஜானகி விதான பத்திரன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 68 ஆயிரத்து 700 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவர்களில், 25 சதவீதமானவர்கள், சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments