Column Left

Vettri

Breaking News

மேலும் 8,400 பேரை நிரந்தர அரசாங்க சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானம்!!





 மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்கள் 8,400 பேர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் வரை நிரந்தர அரசாங்க சேவைக்கு மாறுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒன்பது மாகாணங்களிலும் சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஆதரவாக திட்டமொன்றுக்கு 9 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments

Subscribe Us