புஷ்பா 2 படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பளம்.. ரஜினி, விஜய்யை விட அதிகம்
புஷ்பா 1 - 2
புஷ்பா முதல் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. அல்லு அர்ஜுனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக புஷ்பா முதல் பாகம் அமைந்துள்ளது. அந்த சாதனையை புஷ்பா இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்டமாக உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் இதுவரை சம்பளம் எதுவும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம் விவரம்
அதற்கு பதிலாக இறுதியில் வரும் லாபத்தில் இருந்து 33% சதவீதத்தை சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளாராம். புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்த்தால் ரூ. 330 கோடி வரை அல்லு அர்ஜுன் சம்பளம் இருக்கும் என்கின்றனர்.
அப்படி இந்த வசூல் குறைந்தாலும் கூட ரூ. 250 கோடியில் இருந்து ரூ. 300 கோடி வரை அல்லு அர்ஜுனின் சம்பளம் இருக்கும் என தெரிவிக்கின்றனர். இது நடந்தால் தென்னிந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித்தை அல்லு அர்ஜுன் பின்னுக்கு தள்ளிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments