----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Sunday, September 10, 2023

தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் இலங்கை மக்கள் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Srilanka Fake Messege Problem

போலியான குறுஞ்செய்திகள்

“தபால் மூலம் பார்சல் கிடைத்துள்ளதாகவும் முகவரி தெளிவின்மை காரணமாக அதனைத் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாகவும் எனவே, அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு” போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படவதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் மூலம் மக்களின் இரகசிய தகவல்களை பெற்று பண மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகவும் எனவே எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. 

Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive