----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Friday, September 1, 2023

இராணுவத்தினருக்கு உரித்தான பொருட்களுடன் தெமட்டகொடை மேம்மபாலத்துக்கு அருகில் இருவர் கைது!!!

இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரிகளால் நேற்று முன்தினம் புதன்கிழமை (30) தெமட்டகொட மேம்பாலத்துக்கு அருகில் உள்ள விசேட வீதித் தடையில் வைத்து இராணுவ உடைகள் மற்றும் உபகரணங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகமவைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டியை வீதித்தடையில் நிறுத்தி சோதனையிட்டபோது, இராணுவத்தினருக்கு சொந்தமான ஜங்கிள் கெப், ஆவாக்கி டோக்கிகள், பெற்றரிகள் மற்றும் அதன் 2 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டன.
Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive