பதவியில் இருந்து நீக்க கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி – தயாசிறி குற்றச்சாட்டு!!!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சிலர் நீக்குவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தற்போதே அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைவர் மற்றும் நிறைவேற்று குழு, தாம் பொதுச்செயலாளர் பதவிக்கு பொறுத்தம் இல்லை என்ற தீர்மானத்தை எடுத்தால் உடனடியாக அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகரவின் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
No comments