Column Left

Vettri

Breaking News

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முகநூல் பக்கத்துக்குள் நுழைந்த நபர்!






 மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனினால் பேணப்படும் முகநூல் பக்கத்துக்கு யாரோ அத்துமீறி நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேசபந்து தென்னகோன்  தெரிவிக்கையில்,   

'தேசபந்து தென்னகோன் என்ற பெயரில் தன்னால் பராமரிக்கப்படும் எனது முகநூல் பக்கத்துக்குள் யாரோ நுழைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த முகநூல் பக்கம் மூலம் எந்தத்  தகவலையும் வெளியிட மாட்டேன், அதற்குப் பதில் அளிக்கவும்  மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  

அந்த முகநூல் பக்கத்தை மீட்டெடுக்கவும், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்' என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

No comments