----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Sunday, September 10, 2023

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீர் மின்சார உற்பத்தி

 நீர் மின் உற்பத்தி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிதளவு மழை பெய்து வருவதால் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மழையின் அளவைப் பொறுத்து நாளுக்கு நாள் நீர் மின்சார உற்பத்தி சதவீதம் மாறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைக்க வேண்டிய நிலை

நீர்த்தேக்கங்களில் இதுவரை குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை என தெரிவித்த செனவிரத்ன,  கடந்த வாரம் 14 வீதமாக காணப்பட்ட நீர்மின் உற்பத்தியை உயர்த்துவது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய பணி எனவும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீர் மின்சார உற்பத்தி | Increase In Hydropower Generation 

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யாவிடின் உற்பத்தியை மீண்டும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என மேலும் அவர் கூறியுள்ளார்

Share:

இலங்கை போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்

 பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள போக்குவரத்து சேவைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய திட்டமொன்றினை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி தமது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

முறைப்பாடுகள்

இலங்கை போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம் | Ctb Has Introduced A New Plan For Public

அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக மக்கள் போக்குவரத்து சேவைகள் சம்மந்தமாக அவர்களுக்குள்ள முறைப்பாடுகளை தெரியப்படுத்த முடியும்.

அந்த வகையில் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி 1958 மற்றும் 0117 555 555 என்ற இலக்கங்களிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Share:

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 6 பேர் பலி : 50 பேர் படுகாயம்

 பாகிஸ்தானில் மதம் சார்ந்த கூட்டத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

இங்கு நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் சென்ற நிலையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

pakistan accident

விபத்துக்கான காரணம்

அளவுக்கு அதிகமானோர் பேருந்தில் பயணம் செய்ததும், வளைவான பகுதியில் சாரதி வேகமாக சென்றதும் விபத்து ஏற்ப்படுவதற்கான காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐந்து பேரின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

சஹ்ரானை கைது செய்யாமல் இருந்தமைக்கு காரணம் இது தான்: சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர

 பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காகவே அவர் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்களின் திணிப்பு என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.

நல்லாட்சி அரசாங்கம்

இருப்பினும் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை நாடு என்ற ரீதியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தால் எவராலும் எதுவும் செய்ய முடியாது.

சஹ்ரானை கைது செய்யாமல் இருந்தமைக்கு காரணம் இது தான்: சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர | Chennal 4 Easter Attack Pillayan Goatabaya Sarath

கோட்டபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் தமது உயிரை தியாகம் செய்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னிலை வகித்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல்

பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக அவர் கைது செய்யவில்லை. குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத சம்பவங்கள் பதிவாகின.

சஹ்ரானை கைது செய்யாமல் இருந்தமைக்கு காரணம் இது தான்: சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர | Chennal 4 Easter Attack Pillayan Goatabaya Sarath

வனாத்தவில்லு பகுதியில் வெடிப்பொருட்கள் களஞ்சியசாலை கண்டுப்பிடிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குலை தடுத்திருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சரவையின் உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.”என்றார். 


Share:

பெரும் பண மோசடி :பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கை தபால் திணைக்களத்தினை ஒத்த போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையத்தள முறைகேடுகள் தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஒத்தவாறு ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி, அதிலிருந்து பொதுமக்களிடம் கடன் அட்டைகள், குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய முத்திரை அறிமுகம் இலங்கையில் புதிய முத்திரை அறிமுகம் மோசடியில் சிக்காமல் இதன்படி, தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாக எந்தவொரு பரிவர்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அதற்கான வசதிகளை குறித்த இணையத்தளம் கொண்டிருக்கவில்லை எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும் பண மோசடி :பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Dont Be Fooled By Fraudsters Department Of Posts இதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, போலியான ஏமாற்றுக்காரர்களின் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் அவதானமாக இருக்கும் படி தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார். இவை மாத்திரமல்லாமல், தபால் திணைக்களத்தின் இணையத்தள முகவரியும் முறைகேடான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தபால்மா அதிபர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share:

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

பாறுக் ஷிஹான் நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நீதிமன்றங்களும், சட்டத்துறைகளும் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் சவாலுக்கு உட்படுத்தும் நிலையினை அவதானிக்க முடிகிறது.எனவே இது தொடர்பில் நீதிபதிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் உங்கள் முன்னாள் நடக்குமென்றால், நீதிபதிகளே அந்த வழக்கை எடுத்து விசாரித்து, அவமதிப்பைச் செய்தவருக்கு தண்டனை வழங்க முடியுமென்று லோட் டெனிங் (Lord Denning) எழுதிய ‘சட்டத்தின் ஒழுக்கம்’ (The Discipline of Law) எனும் நூலில் குறிப்பிடுகின்றார். நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிபதிகளை அவமதிக்கவில்லை. அது நீதிமன்ற ஆட்சியினையும், அதிகாரத்தினையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீதிபதிகள் தனிப்பட்ட விடயமாக எடுக்கத் தேவையில்லை” என்றார். இதன் போது ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய ‘Law of Actions’ என்ற நூலின் அறிமுகமும் இடம்பெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. றௌசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், தொழில் நியாய சபை நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Share:

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு? – திருமலையில் எதிர்ப்புப் பேராட்டம்!

அபு அலா - திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், பலவாறு கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். முன்னதாக அப்பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிஸாரினால் குறித்த தடையுத்தரவு வாசித்துக் காட்டப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சாம்பல்தீவு பாலத்துக்கு அப்பால் சென்று தமது எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்தார்கள். திருகோணமலை, இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 540 குடும்பங்களைச் சேர்ந்த 2202 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன், இதனை சூழவுள்ள பெரியகுளம், ஆத்திமோட்டை, சாம்பல் தீவு மற்றும் சல்லி போன்ற கிராமங்களில் தமிழர்கள் மட்டுமே காலகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். சிங்கள பௌத்தர்கள் இல்லாத இப்பிரதேசத்தில் பௌத்த விகாரை நிறுவப்படுமானால், அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து இன வன்முறைக்கும் வித்திடும் என அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர். இதேவேளை, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க கிழக்கு ஆளுநரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 12ஆம் திகதி பெரியகுளம் சந்திப் பகுதியிலும் 28ஆம் திகதி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஏ6 வீதியை மறித்தும் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, அன்று கச்சேரியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் புகுந்து சில பௌத்த பிக்குகள் குழப்ப நிலையை விளைவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share:

About