உலக புகழ்பெற்ற டைட்டானிக் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
டைட்டானிக்
உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். 1997ல் வெளிவந்த இப்படம் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கி இருந்தார்.
காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் இன்று வரை மக்கள் மனதில் இருந்து அழியா இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் ரூ. $2.264 பில்லியன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது டைட்டானிக். இப்படத்தில் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பெர்னார்ட் ஹில்.
நடிகர் மரணம்
இந்த நிலையில் 79 வயதாகும் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த 1970களில் இருந்து சினிமாவில் பயணித்துள்ளார். Boys from the Blackstuff, The Lord of the Rings, The Scorpion King போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments