Column Left

Vettri

Breaking News

EPF முதலீடுகளின் சந்தை மதிப்பு 204.94 பில்லியன் ரூபாயாக உயர்வு!




 ஊழியர் சேமலாப நிதியம் (EPF), கொழும்பு பங்குச் சந்தையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



2026 ஜூன் 30ஆம் திகதியின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 61 நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக EPF நிதியம் 100.15 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பு 204.94 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக EPF வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, 2026 மார்ச் 31ஆம் திகதியன்று 87.33 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட EPF நிதியத்தின் பங்குச் சந்தை முதலீடுகள், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 12.82 பில்லியன் ரூபாயால் அதிகரித்து 100.15 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளன.

2026 ஜூன் 30ஆம் திகதியின்படி, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் EPF நிதியம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Subscribe Us