பாலமுனை கோட்ஃபாதர் அணியின் புதிய சீருடை அறிமுகம்
பாலமுனை கோட்ஃபாதர் அணியின் புதிய சீருடை அறிமுகம்
பிரதம அதிதியாக ஹாதிக் இப்றாஹீம் பங்கேற்பு
தில்சாத் பர்வீஸ்
பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு விளையாட்டு நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, கோட்ஃபாதர் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (10) பாலமுனை நாச்சியாபுரத்தில் நடைபெற்றது.
ரைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஏ. சிபான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அணியின் புதிய சீருடையை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல். பாயிஸ், ஐ. சிறாஜ், முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், ரைஸ்டார் விளையாட்டுக் கழகத் தலைவர் டி. உவைஸ், முன்னாள் தலைவரும் ஆசிரியருமான ஐ.எல்.எம். பாயிஸ், பாலமுனை 04 RDS தலைவரும் தொழிலதிபருமான எம்.ஐ. அர்சாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாலமுனை கோட்ஃபாதர் அணியின் புதிய சீருடை அறிமுகம்
Reviewed by Thakzani
on
11/11/2026 08:00:00 PM
Rating: 5
Reviewed by Thakzani
on
11/11/2026 08:00:00 PM
Rating: 5

No comments