Column Left

Vettri

Breaking News

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 'சித்திரக் கண்காட்சி 2026'




நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 'சித்திரக் கண்காட்சி 2026'


பாறுக் ஷிஹான்


மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற 'சித்திரக் கண்காட்சி 2026 கௌரவ விருந்தினர்களின் பங்கேற்புடன் சிறப்புற இன்று நடாத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலய மாணவர்களின் கலை மற்றும் ஆக்கத்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அதிபர் சீ.எம். நஜீப் அதிபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'சித்திரக் கண்காட்சி 2026' இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


இக் கண்காட்சியில் கல்முனை கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாசா,சிரேஸ்ட அளவையியல் உத்தியோகத்தர் இஸ்மாயில் முக்தார் , கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பி.எம்.ஜே. மாயிதா , நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி றிஷான் (ஹாமி) , பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    


பாடசாலை ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக் கண்காட்சியில் மாணவர்களால் வரையப்பட்ட பல வண்ணமயமான இயற்கை ஓவியங்கள், கட்டிடக் கலைக் கோலங்கள் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வுக்கு வருகை தந்த கௌரவ அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் சித்திரப் படைப்புகளைப் பார்வையிட்டு அவர்களின் திறமைகளைப் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது


No comments

Subscribe Us