நாவிதன்வெளியில் சாதனையாளர் கௌரவிப்பு விழா!
நாவிதன்வெளியில் சாதனையாளர் கௌரவிப்பு விழா!
( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு "வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், பாடசாலை ரீதியாக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நடைபெற்றது.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து திறமையான மாணவர்களை இனங்காணும் நோக்கில் பேச்சு, வாசிப்பு, கவிதை, கட்டுரை, சித்திரம், விவாதம் ஆகிய ஆறு போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. அவற்றின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கே. புவனரூபன், சபையினுடைய செயலாளர் பா.சதீஸ்கரன், பிரதேச சபை யின் உறுப்பினர்கள், நடுவர்கள், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் , உள்ளூராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், நிதி உதவியாளர் எம்.ரகுநந்தன், நாவிதன்வெளி கோட்டத்திலே இருக்கக் கூடிய பாடசாலைகளினுடைய அதிபர்கள், நூலக உதவியாளர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூகமட்ட அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

No comments